அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்; நாளை நடக்கிறது

அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஐந்தாம் கட்டமாக இரண்டு கிராமங்கள் - உடையார்பாளையம் மற்றும் அரியலூர் வட்டங்களில் வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அந்த வகையில் அரியலூர் வட்டத்தில் குலமாணிக்கம் (கிழக்கு), அழகியமணவாளம் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் சூரியமணல், பிச்சனூர் ஆகிய கிராமங்களிலும், ஆண்டிமடம் வட்டத்தில் குவாகம் கிராமத்திலும், செந்துறை வட்டத்தில் பெரியக்குறிச்சி கிராமத்திலும் நடைபெறுகிறது. இந்த முகாமில் வருவாய்த்துறையின் சமூகபாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story