திருவெண்காடு அருகே பலத்த மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பசு மாடுகள் இறந்தன
திருவெண்காடு அருகே பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பசு மாடுகள் இறந்தன.
திருவெண்காடு,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் கடந்த 29-ந் தேதி நள்ளிரவு முதல் பருவமழை பெய்து வருகிறது. கடந்த 30-ந் தேதி ஒரே நாளில் மட்டும் 31 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் திருவெண்காடு அருகே நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையன். இவர் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் ஒரு புறத்தில் அவருக்கு சொந்தமான 2 பசு மாடுகளை கட்டி இருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை பெய்த பலத்த மழையால், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
பசு மாடுகள் இறந்தன
அப்போது சுவரின் இடிந்த பகுதி அங்கு கட்டப்பட்டு இருந்த பசு மாடுகள் மீது விழுந்தது. இதில் 2 பசு மாடுகள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தன. இது குறித்து சீர்காழி தாசில்தார் பாலமுருகனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இறந்த பசு மாடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.

Related Tags :
Next Story