கன்னியாகுமரியில் 2 கார் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப், செல்போன் திருட்டு


கன்னியாகுமரியில் 2 கார் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப், செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 2 Nov 2017 3:45 AM IST (Updated: 2 Nov 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் 2 கார் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப், செல்போன் திருட்டு

கன்னியாகுமரி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அசாரூதீன் (வயது 31), மருத்துவ பிரதிநிதி. இவர் பணி நிமித்தமாக நாகர்கோவில் வந்தார். பின்னர், கன்னியாகுமரியை சுற்றி பார்க்க ஆசைப்பட்டு காரில் கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு காந்தி மண்டப பஜாரில் காரை நிறுத்திவிட்டு சூரிய உதயத்தை பார்க்க சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைந்து கிடந்தது. மேலும், காரில் இருந்த லேப்–டாப், அலுவலக ஆவணங்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் காவேரி குல்கர்னி (23). இவர், தனது உறவினர்களுடன் காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். அவர்கள், காரை கடற்கரை சாலையில் நிறுத்திவிட்டு சூரிய உதயம் பார்க்க சென்றனர். அப்போது மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து அசாரூதீன், காவேரி குல்கர்னி ஆகிய இருவரும் தனித்தனியாக கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story