எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாட அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாட அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து தமிழக அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் முன்னுக்குபின் முரணாக பேசி வருகிறார்கள். ஆனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைத்து கொசுக்களை ஒழிப்பதாக கூறியுள்ளார். கொசுக்களை ஒழிப்பது என்பது மாநில அரசின் வேலை, துப்புரவு தொழிலாளர்களின் வேலை. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத்தான் டாக்டர்களை அழைக்க வேண்டும். கொசுக்களை ஒழிப்பதற்கு அல்ல.
இந்த அரசாங்கத்தை பொறுத்தவரையில் தமிழகத்தில் எந்த வேலையும் நடைபெறவில்லை. இது செயல்படாத அரசாக உள்ளது. சென்னையில் ஒரு நாள் மழை பெய்தால் கூட எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. அதை சரிபடுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய அளவில் பெய்த மழை, புயல் சென்னையை தாக்கியது. அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.
அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாததால் இப்போதும் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் சரி செய்யாமல் இவர்கள் தாரில் ஊழல் செய்வது, வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த மணலை எடுத்து உள் நாட்டில் கட்டிட வேலைகளுக்கு தராமல் யாருக்கோ தருவதற்கு பேரம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களை பொறுத்த வரையில் இருக்கிற வரையில் நாட்டில் ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காக எல்லா வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அநேகமாக விரைவில் வீட்டுக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் எல்லோரும் மாமியார் வீட்டிற்கு (சிறைக்கு) போக வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு முதல் அமைச்சருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் தகுதி இல்லை. எம்.ஜி.ஆர். இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு அ.தி.மு.கவினர் எல்லோரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவை யாரும் பார்க்கக்கூடாது, தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அவரை விரைவில் கட்சியில் இருந்து நீக்க போகிறேன் என்று தெரிவித்தார்.
இது செங்கோட்டையன் போன்றவர்களுக்கு தெரியும். எம்.ஜி.ஆரின் கடைசி ஆசையை கூட நிறைவேற்றாத இவர்கள் அவருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதாக கூறி பள்ளிக் குழந்தைகளை வைத்துக் கொண்டு நாடகம் ஆடுகிறார்கள். எம்.ஜி.ஆர். மீது நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் இவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், தோல்வியையும் தர உள்ளார்கள். மோடியின் கால்களில் யார் விழுந்து கிடக்கின்றார்களோ அவர்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story