மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் பிடிபட்டார் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
தவளக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கையும் களமாக சிக்கினார். அவரை பொதுமக்கள, தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பாகூர்,
தவளக்குப்பத்தை சேர்ந்தவர் தேவா (வயது 44). நேற்று முன்தினம் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் உள்ள ஒரு டீக்கடை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் நைசாக மோட்டார் சைக்கிளை திருடிச்செல்ல முயன்றார்.
அதனை கவனித்துவிட்ட தேவா, என கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர். அதனால் உஷாரான வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல முயன்றார். ஆனாலும் அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அந்த வாலிபர், தவளக்குப்பம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த அப்பு (24) என்பதும், இதுபோன்று புதுவையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியவர் என்பதும் தெரியவந்தது. மேலும் ஒதியஞ்சாலை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியபோது போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டு அந்த வழக்கில் தண்டனை பெற்றவர் என்பதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து வாலிபர் அப்புவை போலீசார் கைது செய்தனர். மேல் விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :
Next Story