மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை உத்தவ் தாக்கரே திடீரென சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,

பா.ஜனதா- சிவசேனா கூட்டணியில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
மம்தா பானர்ஜி
இந்த நிலையில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வதேச வங்காள வணிக உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு மராட்டிய தொழில் அதிபர்களுக்கும், வங்கியாளர்களுக்கும் அழைப்பு விடுப்பதற்காக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை வந்தார்.
தெற்கு மும்பையில் அவர் தங்கியிருக்கும் ஓட்டலில், நேற்று மம்தா பானர்ஜியை பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திடீரென சந்தித்து பேசினார். அப்போது, சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே உடனிருந்தார்.
உத்தவ் தாக்கரே பேட்டி
பின்னர், உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் பேசுகையில், “நாங்கள் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. விவகாரத்தில் இருவரும் ஒரே கருத்தை முன்வைத்தோம். மம்தா பானர்ஜியுடன் இது தான் என்னுடைய முதல் சந்திப்பு. விஷயங்கள் எவ்வாறு வடிவம் பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
மேலும், மும்பை மாநகராட்சியும், கொல்கத்தா மாநகராட்சியும் இணைந்து செயல்படுவது பற்றியும் இந்த சந்திப்பின் போது, ஆலோசனை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
ராகுல்காந்திக்கு பாராட்டு
தேசிய அரசியலை பொறுத்தமட்டில், பாரதீய ஜனதா தலைமையிலான அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார். இதேபோல், சிவசேனாவும் கூட்டணி கட்சியான பா.ஜனதாவுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் விதமாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை சமீப நாட்களாக புகழ்ந்து தள்ளுகிறது.
இந்த சூழலில், மம்தா பானர்ஜியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசி இருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றிருப்பது மட்டுமின்றி, பல்வேறு வியூகங்களுக்கும் வழிவகுக்கிறது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு நவம்பரில் பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியானபோது, உத்தவ் தாக்கரே அளித்த பேட்டி ஒன்றில், “பிரதமர் மோடி சரத்பவாரை சந்திப்பதில் தவறு இல்லை என்றால், முக்கிய பிரச்சினைகளில் மம்தா பானர்ஜியை சிவசேனா தலைவர்கள் சந்திப்பதிலும் தவறு ஏதும் இல்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story