நெடுவாசல், கதிராமங்கலத்தில் போராடுகிற மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்


நெடுவாசல், கதிராமங்கலத்தில் போராடுகிற மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Nov 2017 4:30 AM IST (Updated: 3 Nov 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

நெடுவாசல், கதிராமங்கலத்தில் போராடுகிற மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று சீமான் கூறினார்.

செம்பட்டு,

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை. மழை வரும் முன்பே மின்மாற்றி, மின்கம்பங்களை சரிசெய்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது. இப்போது தண்ணீர் வீட்டிற்குள் புகுந்து விட்டது என்று கூறுவதால் என்ன பயன்?. ஏரி, குளம், குட்டைகளை ஆக்கிரமித்து விட்டு வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிட்டது என்றால் எப்படி?. இப்போது தண்ணீரை மின்மோட்டார் வைத்து வெளியேற்றும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

50 ஆண்டு கால தமிழகத்தின் இந்த பரிதாப நிலைக்கு அனைவருமே காரணம். இந்தநிலையில் தமிழகம் வாழ தகுதியில்லாத மாநிலமாக மாறிவிட்டது என்று தா.பாண்டியன் கூறுவது சரியல்ல. இதற்கு அவர்களும் பொறுப்பேற்க வேண்டும். நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற இடங்களில் எண்ணெய் குழாய்கள் பதிப்பதை தடுக்க அந்தபகுதி மக்கள் பல மாதங்களாக போராடியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. விவசாயத்தை விட்டு, விட்டு போராடிய மக்களை தற்சோர்வு அடைய செய்யும் மத்திய அரசு, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

தற்போது நாடு, பெரு முதலாளிகளின் வேட்டைக்களமாக மாறிவிட்டது. விவசாயி தனது விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயிக்க முடியவில்லை. இந்தநிலை மாறும்போது தான் விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்படும். பா.ஜனதாவிற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே நடைபெறும் மோதல் ஆரோக்கியமானது அல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் போராட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் புகுந்து தாக்குவது ஆபத்தானது. இத்தகைய செயலை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
1 More update

Related Tags :
Next Story