பலத்த மழை பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதிகரிப்பு
பலத்த மழை காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
ஊத்துக்கோட்டை,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.கோடை வெயில் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து நின்று போனதாலும் மே மாத இறுதியில் பூண்டி ஏரி வறண்டது.
இந்த ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த நிலையில் அவ்வப்பொது பலத்த மழை பெய்து வருவதால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 21–ந் தேதி ஏரியில் 19.94 அடியாக நீர் மட்டம் பதிவானது. அதன் பின்னர் 25–ந்தேதி 19.90 அடி, 29–ந் தேதி 20 அடி, இந்த மாதம் 1–ந்தேதி 20.85 அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று காலை 6 மணியளவில் 21.01 அடியாக அதிகரித்துள்ளது.349 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 240 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மழை நீடித்தால் ஏரியின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story