சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2017 10:00 PM GMT (Updated: 3 Nov 2017 5:30 PM GMT)

சேலம் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம்,

சேலம் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன் முன்னிலை வகித்தார்.

கரூர் மற்றும் மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய பா.ஜனதா கட்சியினரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story