திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2017 3:45 AM IST (Updated: 4 Nov 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

கரூர், மயிலாடுதுறையில் மதவாத சக்திகளின் வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று காலை நடைபெற்றது.

திருப்பூர்,

கரூர், மயிலாடுதுறையில் மதவாத சக்திகளின் வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் தமிழ்வேந்தன்(வடக்கு), தமிழ்முத்து(கிழக்கு), முருகன்(தெற்கு), துணை செயலாளர் சத்யன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல அமைப்பு செயலாளர் வளவன் வாசுதேவன், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் பழ.சண்முகம், இளைஞர் எழுச்சி பாசறை துணை செயலாளர் துரைவளவன் உள்ளிட்டவர்கள் கண்டன உரையாற்றினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story