கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்டாக் பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்டாக் பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2017 4:00 AM IST (Updated: 4 Nov 2017 12:59 AM IST)
t-max-icont-min-icon

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

திருச்சி,

பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் ஜவகர்லால்நேரு வரவேற்று பேசினார். அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் பாலன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர். முடிவில் அமைப்பு செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.


Next Story