தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு


தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Nov 2017 4:30 AM IST (Updated: 4 Nov 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரியும் ஒன்று. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி.

செங்குன்றம்,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரியும் ஒன்று. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று ஏரியில் 773 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 1,247 கனஅடி வந்துகொண்டு இருக்கிறது.

நேற்று முன்தினம் 671 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. இதனால் புழல் ஏரி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதே போல் சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 260 மில்லியன் கனஅடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 463 கனஅடியாகவும் இருந்தது.


Related Tags :
Next Story