கோவில்பட்டி அருகே டவுன் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
கோவில்பட்டி அருகே டவுன் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே டவுன் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் சிறைபிடிப்புகோவில்பட்டியில் இருந்து வில்லிசேரி வழியாக காப்புலிங்கம்பட்டி மற்றும் அகிலாண்டபுரத்துக்கு தினமும் 6 முறை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலையில் காப்புலிங்கம்பட்டியில் இருந்து வில்லிசேரி வழியாக கோவில்பட்டிக்கு செல்லும் டவுன் பஸ், தினமும் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ–மாணவிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே வழக்கம்போல் காலை 8 மணிக்கு டவுன் பஸ்சை இயக்க வேண்டும். நிறுத்தப்பட்ட இரவுநேர பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வில்லிசேரியில் நேற்று காலையில் பொதுமக்கள் டவுன் பஸ்சை சிறைபிடித்தனர்.
பேச்சுவார்த்தைபாரதீய கிசான் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, மாவட்ட செயலாளர் சேசு நாயக்கர், மாவட்ட மகளிர் அணி தலைவி கிருஷ்ணம்மாள், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், அரசு போக்குவரத்து கழக பணிமனை உதவி பொறியாளர்கள் சரவணன், ஜெயபால் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வழக்கம்போல் காலை 8 மணிக்கு டவுன் பஸ் இயக்கப்படும். நிறுத்தப்பட்ட இரவுநேர பஸ்கள் மீண்டும் இயக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.