திருச்செங்கோட்டில் மாரியம்மன் கோவில்களில் திருவிழா
திருச்செங்கோட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் திருவிழா நடந்தது.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு நகரில் மிகவும் பழமை வாய்ந்த பெரியமாரியம்மன் கோவில், மேட்டுத்தெருவில் உள்ள சின்னமாரியம்மன் கோவில், மலையடிவாரம் மண்ணுக்குட்டை மாரியம்மன் கோவில், நாமக்கல் ரோடு மாரியம்மன் கோவில், தொண்டி கரடு மாரியம்மன் கோவில், ஐந்துரோடு அழகுமுத்து மாரியம்மன் கோவில், சாட்டை மாரியம்மன் கோவில், சி.எச்.பி. காலனி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 18 பட்டி மாரியம்மன்கோவில்களில் கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். மேலும் பக்தர்கள் அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். சாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. சில பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்தனர். மகாகாளி, ஆதிசக்தி என பல்வேறு சாமி வேடமிட்டும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அங்கப்பா சிலம்பாட்ட குழுவினர் சார்பில் வீரர்கள் சிலம்பாட்டம், மான்கொம்பு சண்டை, சுருள்வீச்சு, கத்திச்சண்டை, புலிவேஷத்துடன் சிலம்பாட்டம், தீப்பந்தத்தில் நுழைந்து சண்டையிடும் சாகச நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டியபடி ஊர்வலமாக வந்து பெரியமாரியம்மனை வழிபட்டனர். இரவில் பெரியமாரியம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
கம்பம் பிடுங்கப்பட்டது
நேற்று காலை பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. பின்னர் அனைத்து கோவில்களிலும் கம்பம் பிடுங்கப்பட்டு பூசாரிகள் அதனை பக்தி பரவசத்துடன் மேளதாளம் முழங்க வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பிறகு சந்தைப்பேட்டையில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் கம்பங்களை மூழ்கவிட்டு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் மஞ்சள்நீர் தெளித்து விளையாடியபடி பக்தர்கள் கோவில்களுக்கு திரும்பி சென்றனர்.

Related Tags :
Next Story