தொடக்க கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர் சான்றிதழ் நகல் எரிக்கும் போராட்டம்
தொடக்க கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் நகல் எரிக்கும் போராட்டம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி,
தொடக்க கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை கல்வி ஆசிரியர் பயிற்சி சான்றிதழின் நகல் எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில தலைவர் கார்கில் ராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கிப்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட துணை செயலாளர் இளம்பரிதி வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 6-வது ஊதிய குழுவில் 3 வகை ஊதியம் கொடுத்து ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு வித ஒற்றுமையின்மையை ஏற்படுத்திவிட்டது. எனவே இடைநிலை ஆசிரியர்களுக்கு கல்வி தகுதிக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். 2009-ம் ஆண்டு முதலான ஊதிய முரண்பாடுகளை களைந்து அதன் பின்னர் 7-வது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும்.
ஊதிய முரண்பாடுகளை களைய கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க 4 வார கால அவகாசம் வழங்கியது. இதில் 2 வாரம் முடிந்து விட்ட நிலையில் அடுத்த 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்கவில்லை என்றால் சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்குனரக அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் நகல்களை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில துணை தலைவர் சபரிராஜ், மாநில செயலாளர்கள் செங்குட்டுவன், முனியசாமி, மண்டல தலைவர்கள் வெங்கட் ராமன், ராஜா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் திருச்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story