கோப்பு கிராமத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க கோரிக்கை


கோப்பு கிராமத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2017 4:00 AM IST (Updated: 5 Nov 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

கோப்பு கிராமத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க கோரிக்கை

ஜீயபுரம்,

அந்தநல்லூர் ஒன்றியம் கோப்பு கிராமத்தில் சி.எஸ்.ஐ மானிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1892-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அன்றைய நிலையில் மண்சுவரால் ஆன ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டது. காலப்போக்கில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பழமையான ஓட்டு கட்டிடத்தில் மண் அரிக்கப்பட்டு மிகவும் அபாயநிலையில் உள்ளதால் அந்த கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறுவதில்லை. பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்பறைக்கு செல்லும் வழியில் உள்ள இந்த கட்டிடம், தற்போது பெய்து வரும் கனமழைக்கு எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. மாணவ, மாணவிகள் அந்த வழியாக செல்லும்போது கட்டிடம் இடிந்து விழுந்தால் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ள அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story