கிருஷ்ணகிரியில் ரோந்து வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


கிருஷ்ணகிரியில் ரோந்து வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 5 Nov 2017 4:15 AM IST (Updated: 5 Nov 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் காவல் துறை ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் குற்ற நிகழ்வுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் துறையின் 4 சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வாகனத்தின் பராமரிப்பு தொடர்பாக ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இந்த வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், ஒவ்வொரு வாகனத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராசன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், சகாயதேவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வின் போது வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். சாலைகளில் விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும். கடத்தலை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறும் போலீசாருக்கு அவர் அறிவுரைகள் வழங்கினார். 

Related Tags :
Next Story