தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வழியாக இயக்க வலியுறுத்தி தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
மன்னார்குடியில் இருந்து தஞ்சை வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் அடுத்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி முதல் திருவாரூர் வழியாக இயக்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால் இந்த ரெயில் தஞ்சைக்கு வராது. இதனை கண்டித்தும், மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வழியாக இயக்க வலியுறுத்தியும் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சை- திருச்சி ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம், தஞ்சை மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, லஞ்சம் கொடாதோர் இயக்கம், தஞ்சை- பூதலூர் ஓய்வூதியர் சங்கம் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்க தலைவர் அயனாபுரம் நடராசன் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் வக்கீல் ஜீவக்குமார், ஓய்வூதியர் சங்க தலைவர் ஜெகதீசன், செயலாளர் ஜான்ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடைபிடித்தவாறு பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்தை மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் ஆதி.நெடுஞ்செழியன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது மழை பெய்து கொண்டே இருந்தது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொட்டும் மழையில் குடைபிடித்துக்கொண்டே கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் இருக்கை வசதியுடன் கூடிய விரைவு ரெயில் இயக்க வேண்டும். பூதலூர் தாலுகாவாகி விட்டதால் பூதலூர் ரெயில் நிலையத்தில் முன்பதிவு வசதி செய்து தர வேண்டும். ராமேஸ்வரம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். திருச்சி- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும்.
நீட்டிக்க வேண்டும்
மானாமதுரை- மன்னார்குடி ரெயிலை மஞ்சள்திடல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் செய்ய வேண்டும். தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் செய்ய வேண்டும். திருச்சி- பாலக்கோடு விரைவு பயணிகள் ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும். பகல் நேரத்தில் தென்மாவட்ட மக்களுக்காக கன்னியாகுமரி வரை புதிய ரெயிலை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் லஞ்சம் கொடாதோர் இயக்க தலைவர் வக்கீல் அன்பரசன், வணிகர் சங்கங்களின் பேரவை நகர தலைவர் வாசுதேவன், ஓய்வூதியர் சங்க செயலாளர் ஞானசேகரன், மூத்த குடிமக்கள் பேரவை செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரெயில் பயணிகள் சங்க துணைத்தலைவர் பாலு நன்றி கூறினார்.

Related Tags :
Next Story