அய்யம்பேட்டை அருகே வயலில் தனியார் பஸ் கவிழ்ந்தது 30 பேர் படுகாயம்
அய்யம்பேட்டை அருகே வயலில் தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
அய்யம்பேட்டை,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை தஞ்சையை நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சின் டிரைவராக பாபநாசம் நல்லூரை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவரும், கண்டக்டராக வலங்கைமானை சேர்ந்த கோடியப்பன் என்பவரும் பணியில் இருந்தனர். பஸ்சில் சுமார் 60 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரி பிரிவுச் சாலை என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையின் அருகில் இருந்த வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அய்யோ, அம்மா என்று அலறினர். இந்த சத்தம் கேட்டு வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களும், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்களும் ஓடி வந்து பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த பயணிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிலர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.
இந்த விபத்தில் அய்யம்பேட்டையை சேர்ந்த புனிதா (வயது 28), நடராஜன் (68), மாத்தூரைச் சேர்ந்த கலைச்செல்வி (36) புதுக்கோட்டையைச் சேர்ந்த புவனேஸ்வரி (36), செருமாக்கநல்லூர் மாதாகோவில் தெருவை சேர்ந்த டேவிட்ராஜ், அவருடைய மனைவி லூர்துசீலா (35), மதுரையை சேர்ந்த முத்துக்கண்ணு (80), சிதம்பரத்தை சேர்ந்த பரிமளா (43), நடராஜன், கும்பகோணத்தை சேர்ந்த சிவசக்தி, பாபநாசத்தை சேர்ந்த அன்புமதி (44), திருப்பாலத்துறை பெரியசாமி (73) உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் காயம் அடைந்து தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அப்போது அருகில் தாசில்தார் தங்கபிரபாகரன் உடன் இருந்தார்.

Related Tags :
Next Story