மலாடில் போலி கால்சென்டர்கள் கண்டுபிடிப்பு 14 பேர் கைது


மலாடில் போலி கால்சென்டர்கள் கண்டுபிடிப்பு 14 பேர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2017 4:05 AM IST (Updated: 5 Nov 2017 4:04 AM IST)
t-max-icont-min-icon

மலாடில் செயல்பட்டு வந்த போலி கால்சென்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போலீசார் இதுதொடர்பாக 14 பேரை கைது செய்துள்ளனர்.

மும்பை,

மிரா ரோட்டில் கடந்த ஆண்டு போலி கால்சென்டர் நடத்தி வந்த கும்பல் சிக்கியது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அமெரிக்க வருவாய் துறை அதிகாரிகள் போல அந்தநாட்டு மக்களிடம் பேசி பணத்தை பறிப்பார்கள். அவர்கள் ரூ. 1,900 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இதேபோல மேலும் சில போலி கால்சென்டர்கள் மலாடு பகுதியில் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மலாடு பகுதியில் சுமார் 4 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் 2 இடங்களில் போலி கால்சென்டர் நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அகர்வால் பிடுபி என்ற போலி கால் சென்டர் நடத்தி வந்த முஸ்கிர் சேக் மற்றும் ஆதித்யா இன்டஸ்ரியல் பகுதியில் போலி கால்சென்டர் நடத்தி வந்த சோகைல் சேக், ஹைதர், செய்யது, சபாஸ் சேக் உள்ளிட்டவர்கள் என மொத்தம் 14 பேரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story