செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வெள்ளம் ஏற்படுமா? ஆளில்லா விமானம் மூலம் படம்பிடித்து ஆய்வு
2015–ம் ஆண்டு போல செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வெள்ளம் ஏற்படுமா? ஆளில்லா விமானம் மூலம் படம்பிடித்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூந்தமல்லி,
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
2015–ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வெள்ளம் ஏற்பட்டதுபோல், இப்போதும் ஏரி நிரம்பி வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் சென்னை மக்களிடையே உள்ளது. அதனை அறிய செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் மற்றும் ஏரிக்கு வரும் தண்ணீர் குறித்தும், அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
பேரிடர் மீட்பு குழு டி.எஸ்.பி. இளங்கோ தலைமையில் 2 ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் ஏரியின் நிலவரத்தை வீடியோவாக பதிவு செய்து ஆய்வு செய்தனர்.