வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு


வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு
x
தினத்தந்தி 6 Nov 2017 4:00 AM IST (Updated: 6 Nov 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவதை தொடர்ந்து வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளனது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி இதன்மூலம் பல்லாயிரக்கணக்காக விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் பெய்த மழையால் வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. எனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாய தேவைக்காக வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிதமாக பெய்து வருகிறது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தண்ணீரின் அளவு நேற்று வினாடிக்கு 650 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதுதவிர மதுரை, சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டு வருகிறது. வடகிழக்குப்பருவமழை மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் கூடுதலாக பெய்யும் பட்சத்தில் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே வைகை அணையில் இருந்து தண்ணீரை ஆற்று வழியாக திறந்தால் விவசாய பணிகள் தொடங்க வாய்ப்பாக அமையும்.

வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் திறந்தால் அந்த கிணறுகளின் நீர்மட்டமும் உயரும். எனவே ஆற்றில் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகை ஆற்றங்கரையோர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story