ஜி.எஸ்.டி.யை எதிர்த்து கருப்பு கொடி ஏற்றி உண்ணாவிரத போராட்டம்; வெள்ளையன்


ஜி.எஸ்.டி.யை எதிர்த்து கருப்பு கொடி ஏற்றி உண்ணாவிரத போராட்டம்; வெள்ளையன்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:45 AM IST (Updated: 6 Nov 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி.யை எதிர்த்து ஜனவரி மாதம் 1–ந் தேதி கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் பேசினார்.

கோவை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோவை மாவட்ட த தலைவர் பி.மாணிக்கம் தலைமையில் கோவையில் நடந்தது. மாவட்ட செயலாளர் கே.முத்துராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் அபிபுல்லா, மாநில இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் லாரன்ஸ் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டு பேசியதாவது:–

கடந்த ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் அபராதம் என்ற பெயரில் வணிகர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

ஜி.எஸ்.டி. வரி பற்றி பெரும்பாலான வணிகர்கள் சரிவர புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே அதை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்து வருகிற ஜனவரி 1–ந் தேதி அனைத்து கடைகளிலும் கருப்புக்கொடி ஏற்றி அந்தந்த சங்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு த.வெள்ளையன் பேசினார்.


Next Story