ஸ்ரீவில்லிபுத்தூரில் விஜய் ரசிகர்கள் கைது
விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மத்திய அரசை கண்டித்தும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடிகர் விஜய் ரசிகர் திருமுருகன் கைதுசெய்யப்பட்டதை கண்டித்தும் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விஜய் மக்கள் இயக்க நகர தலைவர் பாண்டி தலைமை தாங்கினார். ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் ஜோதிபாசு, மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் காளிசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி தலைவர் ராஜபாண்டி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் சிவராமன், மாநில குழு உறுப்பினா ஜெயந்தி, மாதர் சங்க நிர்வாகி ரேணுகாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story