மாவட்டத்தில் 615 மி.மீட்டர் மழை பெய்தும் 70 ஏரிகள் நிரம்பவில்லை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 615 மி.மீட்டர் பதிவானாலும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 70 ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை. எனவே நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்து போனதால் கடும் வறட்சி நிலவியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பெரிய அளவில் மழை இல்லை. இருப்பினும் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையை பொறுத்த வரையில், 303 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு 615 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. இந்த மழை காரணமாக உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான குளம், குட்டைகள் நிரம்பின. இருப்பினும் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் உள்ள பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 79 ஏரிகளில் வெண்ணந்தூர் அருகே உள்ள சேமூர் பெரியஏரி, மின்னக்கல் ஏரி, மாமுண்டி அக்ரஹாரம் ஏரி, பாலமேடு சின்னஏரி, இலுப்புலி ஏரி, அக்கரைப்பட்டி ஏரி, வரகூர் ஏரி, செருக்கலை ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி என 9 ஏரிகள் மட்டுமே நிரம்பி உள்ளன. 10 ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் தேங்கி இருந்தாலும், சுமார் 60 ஏரிகளில் மிகவும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது.
தூசூர் ஏரி
மாவட்டத்திலேயே பெரிய ஏரி என்று அழைக்கப்படும் தூசூர் ஏரியில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தூசூர் ஏரியில் இருந்து பாசன வசதி பெறும் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சுந்தரம் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை காட்டிலும் இருமடங்கு அதிகமாக பெய்தாலும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகளில் 9 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளன. மீதமுள்ள 70 ஏரிகள் இதுவரை நிரம்பவில்லை. இதற்கு கனமழை பெய்யாதது ஒரு காரணமாக இருந்தாலும், ஏரிகளுக்கு நீர்வரும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாதது மற்றொரு காரணமாக இருந்து வருகிறது. எனவே நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி வடகிழக்கு பருவமழையின்போது கிடைக்க பெறும் தண்ணீரை சேமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

Related Tags :
Next Story