மின் கோபுரம் அமைக்கும் நிலத்திற்கு மாதம் ரூ. 25 ஆயிரம் வாடகை வழங்க வேண்டும்
மின் கோபுரம் அமைக்கும் நிலத்திற்கு மாதம் ரூ.25 ஆயிரம் வாடகை வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 800 கே.வி. திறன் கொண்ட அகல மின்பாதை அமைப்பது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நர்சரி பண்ணை உரிமையாளர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணையன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் கோகுல் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் ராமக்கவுண்டர் பங்கேற்று, ஆலோசனை வழங்கி பேசினார்.
இதில் கரூர் மாவட்டம் புகலூரில் இருந்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்சர் வரை 1,850 கி.மீ தூரம் வரை 800 கே.வி. மின்சாரம் கொண்டு செல்லும் திட்டம் விவசாய நிலங்களில் எடுத்து செல்வதற்கு அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் பகுதியில், இந்த அகல மின்பாதை செல்கின்ற விவசாயிகளின் நிலங்களில் தென்னை மரங்கள், மா மரங்கள் ஆழ்துளை கிணறுகள், வீடுகள், விவசாயப்பயிர்கள் உள்ளன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு எவ்வளவு வழங்குவது என முடிவு செய்யாமல், பணியை தொடங்கி உள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
இதனால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே, இதற்காக இழப்பீடாக மா மரம் மற்றும் தென்னை மரம் ஒன்றுக்கு தலா ரூ. 50 ஆயிரம், நாற்று செடி ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம், ஓட்டு மா செடி ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும், ஆழ்துளை கிணறு ஒன்றுக்கு ரூ.15 லட்சம், கிணறு ஒன்றுக்கு ரூ.13 லட்சம், வேளாண் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மின் கோபுரம் அமைக்கும் நிலத்திற்கு மாதம் ரூ.25 ஆயிரம் வாடகை வழங்க வேண்டும்.
அத்துடன் உரிய இழப்பீடு வழங்கும் வரை அகல மின்பாதை அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த கோரிக்கையினை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி அவதானப்பட்டியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story