ரெயில்வே பாலத்தில் புதிதாக காங்கிரீட் தூண்கள் பொருத்தும் பணி பயணிகள் அவதி
பணகுடி அருகே பழைய இரும்பு ரெயில்வே பாலத்தில் புதிதாக காங்கிரீட் தூண்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது. அதன் காரணமாக திருச்சி இன்டர்சிட்டி ரெயில் நெல்லைக்கு 4 மணி நேரம் தாமதமாக வந்தது. இதுதொடர்பான முறையான அறிவிப்பு ஏதும் இல்லாதால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
பணகுடி,
நெல்லை- நாகர்கோவில் ரெயில்வே வழித்தடத்தில் பணகுடிக்கு வடபுறம், தண்டையார்குளம் செல்லும் ரோட்டின் மேல் பகுதியில் பழமையான ரெயில்வே பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் மீது ரெயில்கள் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் வேகமாக ரெயில்களை இயக்கும் வகையில், இரும்பு பாலத்தை அகற்றி விட்டு, புதிதாக காங்கிரீட் பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கல்மூலம் கட்டப்பட்டிருந்த தூண் மற்றும் சுவர் காங்கிரீட் மூலம் பலப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் இரண்டு பக்கத்தையும் இணைக்கும் வகையில், ராட்சத காங்கிரீட் கிடைமட்ட இணைப்பு தூண்கள் (காங்கிரீட் உத்திரம்) தயாரிக்கப்பட்டது. 3 மாதங்களாக பணிகள் நடைபெற்று தயார் செய்யப்பட்டன.
இந்த நிலையில் நேற்று புதிய காங்கிரீட் இணைப்பு தூண்களை பொருத்தும் பணி நடைபெற்றது. காலை 8 மணிக்கு பணிகள் தொடங்கியது. முதலாவதாக, இரும்பு தூண்கள் மீது பொருத்தப்பட்டிருந்த தண்டவாளமும், அதை தொடர்ந்து இரும்பு தூண்களும் அகற்றப்பட்டன.
பின்னர் ராட்சத கிரேன் மூலம் புதிய காங்கிரீட் கிடைமட்ட தூண்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று இருபக்க சுவர்களுக்கு நடுவே வைத்து இணைத்தனர். பின்னர் அதன் மீது தண்டவாளமும் பொருத்தப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பணி, மாலை 6 மணிக்குத்தான் முடிந்தது.
இதையொட்டி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இன்டர்சிட்டி ரெயில் மதியம் ஒரு மணிக்கு பணகுடியை கடந்து செல்லும். புதிதாக காங்கிரீட் தூண்கள் பொருத்தும் பணிகளையொட்டி, நேற்று மாலை தாமதமாக 6 மணிக்கு மேல் இன்டர்சிட்டி ரெயில் பணகுடியை கடந்து சென்றது.
இந்தநிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மதியம் 2.30 மணி முதலே திருச்சி இன்டர்சிட்டி ரெயிலுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். வெகு நேரமாகியும் ரெயில் வராததால் அங்குள்ள பயணிகள், ரெயில் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால், போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், பயணிகளுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாலை 6.40 மணிக்கு இன்டர்சிட்டி ரெயில் வரும் என போலீசார் தெரிவித்தனர். அதன்படி மாலை 6.40 மணிக்கு இன்டர்சிட்டி ரெயில் நெல்லைக்கு வந்து சேர்ந்தது.
மேலும் பணகுடி அருகே பாலம் வேலை சம்பந்தமாக முறையான அறிவிப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை. வழக்கமாக இன்டர்சிட்டி ரெயில் நெல்லைக்கு மதியம் 2.40 மணிக்கு வந்து சேரும். ஆனால் நேற்று 4 மணி நேரம் தாமதமாக வந்தது.
இதனால் அந்த ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். பயணிகள் சிலர் ஆத்திரம் அடைந்து, தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு சென்றனர். இச்சம்பவத்தால் சந்திப்பு ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story