ஒலிபெருக்கி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருதரப்பினர் இடையே மோதல்
பாவூர்சத்திரம் அருகே ஒலிபெருக்கி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணபேரியில் பெரிய அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. கடந்த வாரம் திருவிழாவிற்கான கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று(திங்கட்கிழமை) முதல் நடைபெற உள்ள திருவிழாவிற்காக நேற்று ஊரில் உள்ள அனைத்து தெருக்களிலும் ட்யூப் லைட்டுகள் மற்றும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டன. ஊரின் வடக்கு தெருவில் இமானுவேல் ஜெப வீடு உள்ளது. அதன் அருகே ஒலிபெருக்கி அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு ஜெப வீட்டின் போதகர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் இதுகுறித்து நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், பாவூர்சத்திரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜரத்தினம், பரமேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தகவல் அறிந்ததும் இரு தரப்பினரும் அங்கு திரண்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு உருவானது. உடனே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் திருவிழா முடியும் வரை இருதரப்பினரும் எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்றும், திருவிழா முடிந்த பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினர். இதில் சமரசம் ஏற்பட்டு இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story