கடியப்பட்டணத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்


கடியப்பட்டணத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:15 AM IST (Updated: 6 Nov 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

கடியப்பட்டணத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்

மணவாளக்குறிச்சி,

இனயம் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி கடியப்பட்டணத்தில் மீனவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு பங்கு பேரவை துணைத்தலைவர் ஜோசப் சுந்தர் தலைமை தாங்கினார். பங்குத்தந்தை கிங்சிலி ஜோன்ஸ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், இனயம் துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜேசையா, இணை ஒருங்கிணைப்பாளர்கள் பெர்லின், ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர், போராட்ட குழு தலைவர் டல்லஸ், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் ஸ்டீபன், முட்டம் மறை வட்டார முதன்மை பணியாளர் பஸ்காலீஸ், ஆலஞ்சி மறை வட்டார முதன்மை பணியாளர் ஜேசுதாசன், இனயம் பங்குத்தந்தை அன்பரசன், சின்னவிளை பங்குத்தந்தை ஆன்றனி கிளாரட், இனயம் ஜமாத் அப்துல் லத்தீப், பூட்டேற்றி சார்லஸ் ஆகியோர் பேசினர். போராட்டத்தின் இடையே களரி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போராட்டத்தின் போது மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

Related Tags :
Next Story