தாமரைபாக்கம் ஊராட்சியில் 250 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே தாமரைபாக்கம் ஊராட்சியில் உள்ள லட்சுமி நகர், சக்திநகர் பகுதியில் 250 வீடுகள் உள்ளது.
பெரியபாளையம்,
கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக இந்த பகுதியில் மழை நீர் தேங்கி வீடுகளை சூழ்ந்துள்ளது. தேங்கியுள்ள இந்த மழைநீர் வெளியேறும் கால்வாய் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் உள்ளது. இந்த கால்வாயில் ஓட்டல்களில் உள்ள கழிவுகளை சிலர் கொண்டுவந்து கொட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கால்வாய் வழியாக மழைநீர் வெளியே செல்ல முடியவில்லை.
இதனால் மழைநீர் இங்கு தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. இதில் இருந்து விஷ பூச்சிகள் இரவு நேரத்தில் வீட்டில் வருவதால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே, இந்த மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story