சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி, கன்னடம் பயில்கிறார்


சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி, கன்னடம் பயில்கிறார்
x
தினத்தந்தி 6 Nov 2017 3:51 AM IST (Updated: 6 Nov 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி, கன்னடம் பயின்று வருகிறார்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி, கன்னடம் பயின்று வருகிறார். அவர், கன்னடத்தில் பேசவும் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கன்னடம் பயில ஆர்வமாக இருக்கும் கைதிகளுக்கு சிறையில் கன்னடம் பயிற்று விக்கப்பட்டு வருகிறது. இந்த கன்னட வகுப்பில் இளவரசி கலந்து கொண்டு ஆர்வமாக கன்னடம் பயின்று வருகிறார்.

கன்னடம் பயின்று வரும் இளவரசி 1 மற்றும் 2–ம் கட்ட கன்னட தேர்வுகளில் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், அவர் எழுத்துகள் கூட்டி படிக்கவும் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story