ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு 17 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்
கோதையாறு பாசன திட்டத்தில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் 17 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அழகப்பபுரம்,
குமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு பாசனத்திட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட ராதாபுரம் கால்வாய்க்கு பாசனத்துக்காக ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டில் பாசனத்துக்காக ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்படி அழகப்பபுரம் அருகே உள்ள திருமூலநகரில் நிலப்பாறை கால்வாயில் இருந்து ராதாபுரம் கால்வாய் பிரியும் இடத்தில் நேற்று தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கலந்து கொண்டு ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீரை திறந்து விட்டார். இந்த நிகழ்ச்சிக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை முன்னிலை வகித்தார். கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டதும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், இன்பதுரை எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் தூவினார்கள்.
பின்னர் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறும்போது, “கோதையாறு பாசனத்திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் அமைந்துள்ள ராதாபுரம் கால்வாயில் பாசனத்துக்காக வினாடிக்கு 75 கன அடி வீதம், இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 25–ந் தேதி வரை மொத்தம் 129.8 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ராதாபுரம் தாலுகா லெவிஞ்சிபுரம், கருங்குளம், பழவூர், அடங்கார்குளம், அழகனேரி, தனக்கர்குளம், கூடங்குளம், பரமேசுவரபுரம் மற்றும் ராதாபுரம் கிராமங்களை சார்ந்த 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிஜாமுதீன், பொதுப்பணித்துறை (நீர் ஆதார பிரிவு) செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் வசந்தி, உதவி பொறியாளர்கள் சுபாஷ், ரமேஷ் ராஜன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story