வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, இறந்தவர்கள் பெயர் நீக்கும் பணி தீவிரம்


வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, இறந்தவர்கள் பெயர் நீக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 7 Nov 2017 3:45 AM IST (Updated: 7 Nov 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 26 ஆயிரத்து 677 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இரட்டை பதிவு மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 3-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியல்படி 31 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய கடந்த மாதம் 31-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப் பட்டிருந்தது.

அதன்படி 18 வயது நிரம் பியவர்கள், பெயர் விடுபட்ட வர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் கொடுத்து வந்தனர். பெயர் நீக்கம், முகவரி மாற்றம் செய்யவும் விண்ணப்பம் பெறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய வருகிற 30-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 ஆயிரத்து 356 பேரும், பெயர் நீக்கம் செய்ய 998 பேரும், திருத்தம் செய்ய 3,431 பேரும், முகவரி மாற்றம் செய்ய 1,892 பேரும் என மொத்தம் 26 ஆயிரத்து 677 பேர் மனு கொடுத்துள்ளனர்.

இறந்தவர்கள் பெயர் நீக்கும் பணி தீவிரம்

இந்த நிலையில் ஒரே வாக்காளரின் பெயர் இரண்டு இடங்களில் இடம் பெற்றிருந் தால் அதை ஒரு இடத்தில் நீக்குவது, இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்கான பணிகள் தொடங்கி இருக்கி றது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்காளர் பட்டியலுடன் வீடு, வீடாக சென்று இறந்தவர்களின் பெயர்கள், மாறுதலாகி சென்றவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பது குறித்து கணக்கெடுத்து வருகிறார்கள்.

மேற்கண்ட தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story