கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறையினரை கண்டித்து முஸ்லிம்கள் சாலை மறியல்


கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறையினரை கண்டித்து முஸ்லிம்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:15 AM IST (Updated: 7 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறையினரை கண்டித்து முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே 11 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலம் பல ஆண்டுகளாக தர்கா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் பாழடைந்த வீடுகளுடன், முட்புதர்கள் நிறைந்து காணப்பட்டதாலும், மழைநீர் தேங்காத வண்ணம் டெங்கு ஒழிப்பு மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்தனர்.இதற்காக நேற்று காலை வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பாழடைந்த வீட்டையும், முட்புதர்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தர்கா கமிட்டியினர் மற்றும் முஸ்லிம் மக்கள், வருவாய்த்துறையினரை கண்டித்து, கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிருஷ்ணகிரி நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் கலெக்டர் அலுவலகம் வரை நீண்ட வரிசையில் நின்றது.

போலீசார் பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் பேசிய துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், அந்த இடத்திற்கான உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த அவர்களும் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story