மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரி முதியவர்கள் மனு
நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியவர்கள் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 203 மனுக்களை நேரடியாக பெற்றார். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அது பற்றிய விவரங்களை மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களிடம் கேட்டு கொண்டார்.
முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி...
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூரை சேர்ந்த முதியவர்கள் திரளானோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில், முதியோர் உதவித்தொகையை வங்கியிலிருந்து வாங்கி வந்த எங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென சில காரணங்களை கூறி பணம் பட்டுவாடா நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக எங்கள் பகுதியில் உள்ள அந்த வங்கியில் கேட்ட போது சரிவர பதில் தெரிவிக்க மறுத்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உதவித்தொகை வராததால் நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. எனவே நிறுத்தப்பட்ட உதவித்தொகையை அலைக்கழிப்பு மற்றும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் துங்கபுரத்தை சேர்ந்த டி.கே.ராமலிங்கம் அளித்த மனுவில், அரியலூரிலிருந்து புறப்பட்டு பெரம்பலூரில் உள்ள மருதையான்கோவில், புதுவேட்டக்குடி, துங்கபுரம், வயலப்பாடி வழியாக திட்டக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சை சில காரணங்களால் நிறுத்திவிட்டனர். இதனால் துங்கபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் வெளிவேலைக்கு செல்லவும், மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும் சிரமப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை இந்த வழித்தடத்தில் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஸ்ரீராம், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) உமாமகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தற்போது பெரம்பலூரில் மழை தூறிக்கொண்டே இருப்பதால் விவசாய பணிகளை கவனிப்பதில் மக்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். இதனால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வழக்கத்தை விட குறைவான அளவே மக்கள் மனு கொடுக்க வந்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசாரின் சோதனைக்கு பின்னரே மனு கொடுக்க ஒவ்வொருவராக அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story