மரகதலிங்கம்-நந்தி சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்
மரகதலிங்கம்-நந்தி சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 20-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கும்பகோணம்,
ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சாமி சிலைகளை கடத்தி விற்பனை செய்ய பேரம் பேசப்படுவதாக தமிழக டி.ஜி.பி.க்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கருணாகரன் உள்ளிட்ட குழுவினர் நேற்றுமுன்தினம் ஈரோட்டிற்கு வந்து தங்கும் விடுதியை சோதனையிட்டனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோட்டை சேர்ந்த கஜேந்திரன் (வயது48), சந்திரசேகரன் (50), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மணிராஜ் (50) ஆகியோர் என்பதும், அவர்கள் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சிவன் கோவிலில் இருந்து 4 ஆண்டுக்கு முன்பு திருடப்பட்ட மரகதலிங்கம் மற்றும் நந்தி சிலை ஆகியவற்றை கடத்தி விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரை கைது செய்து, ரூ. 7 கோடி மதிப்பிலான சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மரகதலிங்கம் மற்றும் நந்தி சிலை ஆகியவை கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது.

Related Tags :
Next Story