நாகை மாவட்டத்தில் 8-வது நாளாக மழை அத்தியாவசிய பொருட்கள் வாங்க படகில் செல்லும் பொதுமக்கள்
நாகை மாவட்டத்தில் நேற்று 8-வது நாளாக மழை பெய்தது. இதனால் தலைஞாயிறு பகுதியில் உள்ள கிராமங்களை தண்ணீர் சூழ்ந்ததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அந்த பகுதி பொதுமக்கள் படகில் சென்று வருகின்றனர்.
நாகப்பட்டினம்,
தமிழகத்தில் கடந்த 27-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நாகை மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8-வது நாளாக நாகை மாவடத்தில் மழை பெய்தது. பின்னர் மழைவிட்டு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த மழையினால் பெரும்பாலான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மேலும், வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
வயல்களில் தண்ணீர் தேங்கியதால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளன. நாகை தெற்கு பால்பண்ணைச்சேரி சிவசக்தி நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் நாகை புதிய நம்பியார்நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த குடியிருப்பு கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டி கொடுக்கப்பட்டதாகும். இந்த வீடுகள் தொடர்ந்து பராமரிக்கப்படாததாலும், தற்போது கனமழை பெய்து வருவதாலும் வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த குடியிருப்புகளுக்குள் உள்ள பெரும்பாலான வீடுகளில் மேற்கூரைகளின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த குடியிருப்புகளில் உள்ளவர்கள் அச்சப்படுகின்றனர்.
அதேபோல் காடம்பாடி, சாலமண்தோட்டம், நாகூர், நாகை வாய்க்காங்கார தெரு, கூக்ஸ்ரோடு, செல்லூர் சுனாமி குடியிருப்பு, பாலையூர், வேட்டைக்காரனிருப்பு, முதலியப்பன்கண்டி, பழையாற்றங்கரை, தலைஞாயிறு, வண்டல், குண்டுரான்வெளி, உம்பளச்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து தீவு போல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க படகு மூலம் கடைதெருவுக்கு சென்று வருகின்றனர்.

Related Tags :
Next Story