சித்தராமையா, மங்களூரு மேயர் குறித்து ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறான கருத்து தெரிவித்தவர் மீது போலீசில் புகார்


சித்தராமையா, மங்களூரு மேயர் குறித்து ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறான கருத்து தெரிவித்தவர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 7 Nov 2017 3:40 AM IST (Updated: 7 Nov 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையா, மங்களூரு மேயர் குறித்து ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறான கருத்து தெரிவித்தவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மங்களூரு, 

மங்களூரு நேரு மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய அளவிலான கராத்தே போட்டியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். இந்த போட்டியின்போது, முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு, மங்களூரு மாநகராட்சி மேயர் கவிதா சனில், கராத்தே பயிற்சி அளித் தார். அப்போது, சித்தராமையா, மேயரின் வயிற்றில் குத்துவது போன்ற புகைப்படம் வெளியாகியது.

இந்த நிலையில், அந்த புகைப்படத்தை வைத்து, ஒருவர் ‘வாட்ஸ்-அப்‘பில் சித்தராமையா, மங்களூரு மேயர் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்துள்ளார். அந்த தகவல் தற்போது ‘வாட்ஸ்-அப்‘பில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை பார்த்து காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போலீசில் புகார்

இந்த நிலையில், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் சந்திரசேகர் காமந்த், இதுகுறித்து பெல்லூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல, தட்சிண கன்னடா மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர் ஹரிபிரசாத் என்பவர், போலீசில் தனியாக ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், சித்தராமையா மற்றும் மங்களூரு மேயர் குறித்து ‘வாட்ஸ்-அப்‘பில் பரவும் அவதூறான கருத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story