வரிகுறைப்பு பற்றி ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அறிவிக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்
வரிகுறைப்பு பற்றி ஜி.எஸ்.டி. கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்காவிட்டால் தென் மண்டல அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
திருச்சி,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் வெ. கோவிந்தராஜுலு வரவேற்று பேசினார். மாநில துணை தலைவர்கள் கந்தன், அப்துல் ஜப்பார், கண்ணன், ஹக்கீம் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வணிகர்களை வெகுவாக பாதித்து வரும் சரக்கு சேவை வரியினால் (ஜி.எஸ்.டி.) குறைகளை நிவர்த்தி செய்ய வணிக பிரதிநிதிகளை அழைத்து கலந்தாய்வு செய்யவேண்டும். வரி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் உள்ள தண்டனை சட்டங்களை மாற்றி அமைத்து வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜி.எஸ்.டி. ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் தினசரி ரூ.200 அபராதம் என்பதை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. வரி கணக்கை மாநில மொழிகளிலும் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வணிக உரிமங்களை ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பதை மாற்றி அமைத்து, நிரந்தரமான உரிமம் அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றி அமைக்கவேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் பதிவு செய்வதற்கான விற்பனை வரம்பை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவித்திட வேண்டும்.
கேரள மாநிலத்தில் தற்போது அமலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ள வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்குவதற்கான சட்ட திருத்தத்தை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும்.
உணவகங்களில் ஜி.எஸ்.டி. யோடு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்தால் உணவக தொழில் அடியோடு அழிந்து போகும் என்பதால் இதனை நீக்கி அறிவிக்க வேண்டும். குளிர்பதனம் அல்லாத உணவகங்களில் 5 சதவீதம் மட்டுமே ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படவேண்டும்.
நகராட்சிகளில் ஏற்கனவே சொத்து வரி, குடிநீர் வரி, கழிவு நீர் வரி, அபிவிருத்தி வரி, வணிகவரி என பல வரிகள் இருக்கும் நிலையில் புதிதாக விதிக்கப்பட்ட குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வது.
மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை விளக்கி விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, ‘ஜி.எஸ்.டி. வரி குறைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் 9 (நாளை)மற்றும் 10-ந்தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிறைய பொருட்களுக்கு வரி குறைப்பு செய்து அதுபற்றிய சாதகமான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி அடங்கிய தென் மண்டல மாநிலங்களில் வணிகர்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.
கூட்டத்தில் திருச்சி மண்டல தலைவர் தமிழ் செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், நிர்வாகிகள் செந்தில் பாலு, தங்கராஜ் உள்பட அனைத்து மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story