டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீடுகளிலுள்ள தண்ணீர் தொட்டியை வாரம் இருமுறை சுத்தப்படுத்துங்கள்
டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீடுகளிலுள்ள தண்ணீர் தொட்டியை வாரம் இருமுறை சுத்தப்படுத்துங்கள் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் லட்சுமி பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுத்திடவும், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொய்யூர், சாத்தமங்களம், வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் தேக்கத்தொட்டியை பயன்படுத்தி வருபவர்களுக்கு உடனடியாக நோட்டீசு வழங்க உத்தரவிட்டார். மேலும் தேங்கி வைக்கப்பட்டுள்ள நீரினை அப்புறப் படுத்த ஊழியர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்
பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து, தங்களுடைய வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தண்ணீர் தொட்டியை வாரம் இரு முறை சுத்தப்படுத்திட வேண்டும். பருவ மழை தொடங்கி உள்ளதால், வீடுகளிலுள்ள மேல்தளம் மற்றும் டயர், தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் டீ கப், உரல், அம்மிகல் போன்றவைகளில் தண்ணீர் தேங்காமல் பராமரித்திட வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் சுயவைத்தியம் செய்திடாமல், அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மக்களிடம் கலெக்டர் கேட்டு கொண்டார். இந்த ஆய்வின்போது, திருமானூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகிலா, ஜெயராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story