திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தர்மராஜா கலந்து கொண்டு பேசினார். ஊராட்சி செயலாளருக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் புஷ்பநாதன், மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட செயலாளர் வசந்தன், மாநில நிர்வாகி சந்தானகிருஷ்ணரமேஷ், மாநில பொருளாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் செந்தில் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story