சிலைகள் திருட்டு வழக்கு: கும்பகோணம் கோர்ட்டில் சுபாஷ்சந்திரகபூர் ஆஜர்
அரியலூர் மாவட்ட கோவில்களில் சிலைகள் திருட்டுப்போன வழக்கில் பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்சந்திரகபூர் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கும்பகோணம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சித்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சிலைகள் திருட்டு போனது. இது குறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் இரண்டு பேர் இறந்துவிட்டனர். பிச்சுமணி என்பவர் அப்ரூவராக மாறிவிட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்சந்திரகபூரை போலீசார் திருச்சி மத்திய சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிச்சாமி, சஞ்சீவிஅசோகன், சிவக்குமார், கலியபெருமாள், ரெத்தினம், கந்தசாமி, அருணாசலம், ஸ்ரீராம், பார்த்தீபன் ஆகிய 9 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். சென்னையை சேர்ந்த பாக்கியகுமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு(செவ்வாய்க்கிழமை) நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதைப்போல அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டு 8 சிலைகள் திருட்டு போனது. இது தொடர்பாகவும் சுபாஷ்சந்திர கபூர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கும் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கையும் நீதிபதி வருகிற 14-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story