தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
துவாக்குடி தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
திருச்சியை அடுத்த துவாக்குடியில் இயங்கி வரும் ஜி.பி. என்ஜினீயரிங் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து அதில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஜி.பி. என்ஜினீயரிங் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் செயல் தலைவர் குழ.பால்ராஜ் தலைமை தாங்கினார்.
கடந்த 4 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு நிர்வாகம் முறையான ஊதியம் வழங்கவில்லை, தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தாமல் கையாடல் செய்யப்பட்டு உள்ளது. 5 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்பன உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது மனைவி மற்றும் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவி களும் சீருடையுடன் பங்கேற்றனர். ஜி.பி. நிர்வாகமே தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்காதே, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி பணத்தை உடனே அலுவலகத்தில் செலுத்து, செப்டம்பர், அக்டோபர் மாத சம்பளத்தை உடனே வழங்கு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்கு என்பன உள்பட பல கோஷங் களை தொழிலாளர்கள் எழுப்பினார்கள்.
கோரிக்கைகளை விளக்கி தமிழ் தேசிய பேரியக்கத்தின் உயர் மட்ட குழு உறுப்பினர் வைகரை, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவித்துவன், ராஜா ரகுராமன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டம் முடிவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story