தொடர்ந்து சாராயம் விற்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தொடர்ந்து சாராயம் விற்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
போளூர்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளை, சாராய வியாபாரம் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவின்படி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
போளூர் போலீஸ் உட்கோட்டத்தில் தொடர்ந்து சாராயம் விற்று வந்த முடையூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி கவுரி (வயது 41), பொத்தரை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தருமன் என்பவரின் மனைவி கவுரி (38), வெலுக்கனந்தல் ராஜமாணிக்கம் என்பவரின் மனைவி பச்சையம்மாள் (55), நவரப்பாளையத்தை சேர்ந்த பாரதிராஜா (29), செங்குணத்தை சேர்ந்த ஆனந்தன் (42) ஆகிய 5 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு போளூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இவர்கள் தொடர்ந்து சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இதற்கான நகல் சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story