அனைத்து கிராமங்களிலும் ஏரிகளுக்கு மழைநீர் செல்ல கால்வாய்கள் அமைக்க வேண்டும்


அனைத்து கிராமங்களிலும் ஏரிகளுக்கு மழைநீர் செல்ல கால்வாய்கள் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Nov 2017 4:00 AM IST (Updated: 8 Nov 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் ஏரிகளுக்கு மழைநீர் செல்ல கால்வாய்கள் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பா.ம.க. சார்பில் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் மூலம் அனைத்து கிராமங்களையும் தூய்மைப்படுத்தி டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் கொசுமருந்து அடிக்க வேண்டும்.

வெண்கல சிலை

பருவமழை தொடங்கியதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும். ஏரிகளுக்கு மழைநீர் செல்ல புதிய கால்வாய்கள் அமைக்க வேண்டும். தர்மபுரி நகரில் பஸ் நிலையம் அமைக்க இடம் வழங்கிய ராஜகோபால் கவுண்டர், தர்மபுரி மாவட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்த டி.என்.வடிவேல் கவுண்டர், சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பணியாற்றிய தியாகி தீர்த்தகிரி முதலியார் ஆகியோர் தர்மபுரியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உள்ளனர்.

எனவே பா.ம.க. சார்பில் இவர்கள் 3 பேருக்கும் தர்மபுரியில் வெண்கல சிலை அமைக்க மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி தர வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளனர்.


Related Tags :
Next Story