சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு பயிற்சி
சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது.
ஓமலூர்,
ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த விமான நிலைய சேவை கடந்த 2010-ம் ஆண்டு முதல் திடீரென மூடப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், சேலம் உள்பட சில இடங்களில் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அதன்பேரில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் ஆர்ஜிதப்படுத்தும் நடவடிக்கையில், வருவாய் துறை தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
மீண்டும் தொடக்கம்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சேலம் விமான நிலையம் நவம்பர் மாதத்தில் இருந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து விமான போக்குவரத்து சேவை இந்த மாதம் கடைசி அல்லது அடுத்த மாதம்(டிசம்பர்) முதல் வாரத்தில் மீண்டும் தொடங்கப்படும் என தெரிகிறது.
இதற்காக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சேலத்தில் விமான போக்குவரத்தை தொடங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. முதலில் புதுச்சேரி-சேலம்-பெங்களூரு மார்க்கத்திலும், அதேபோல் பெங்களூரு-சேலம்-புதுச்சேரிக்கும் விமான சேவை தொடங்க உள்ளதாக தெரிகிறது.
போலீசாருக்கு பயிற்சி
இந்த நிலையில் சேலம் விமான நிலைய அலுவலகத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார் மேற்கொள்ள வேண்டிய பணிகள், ரோந்து பணியில் ஈடுபடுவது குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 52 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இந்திய விமான சேவை முதுநிலை மேலாளர் ஜோதி, போலீசாருக்கு பயிற்சி அளித்தார்.
நேற்று தொடங்கிய இந்த பயிற்சி வகுப்பு வருகிற 11-ந் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. விமான சேவை தொடங்க உள்ளதையடுத்து விமான நிலைய இயக்குனர் சித்தார்த்தன், முதன்மை பாதுகாப்பு அதிகாரி முகமது ரியாஸ் ஆகியோர் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story