ஓ.பன்னீர்செல்வம் பெயரில் அழைப்பிதழ் தயாரித்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பணம் வசூலித்த போலி நிருபர் கைது


ஓ.பன்னீர்செல்வம் பெயரில் அழைப்பிதழ் தயாரித்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பணம் வசூலித்த போலி நிருபர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2017 4:45 AM IST (Updated: 9 Nov 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வம் பெயரில் அழைப்பிதழ் தயாரித்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பணம் வசூலித்த போலி நிருபர் கைது செய்யப்பட்டார்.

பெரியகுளம்,

தேனியை சேர்ந்த ராஜாமுகமது பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த குருசீனிவாசன் (வயது 45) தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று அடையாளம் காட்டிக்கொண்டு துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் போலி அழைப்பிதழ் தயாரித்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்தார். இதற்கு ஜான்மணி, செல்வராஜ், சாதிக்பாட்ஷா ஆகியோர் உடந்தையாக இருந்தனர் என கூறியிருந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து போலி நிருபர் குருசீனிவாசனை கைது செய்தனர். மேலும் ஜான்மணி உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், 4 பேரும் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மற்ற 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினால் தான் எவ்வளவு பணம் வசூல் செய்தார்கள் என்பது தெரியவரும்’ என்றனர்.


Next Story