மத்திய அரசை கண்டித்து உடுமலையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தது.
உடுமலை,
மத்திய அரசு ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தது. இதனால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து நவம்பர் 8-ந் தேதியை கருப்பு தினமாக தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்தன. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் அன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க.வினர் அறிவித்தனர். அதன்படி திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உடுமலை மத்திய பஸ்நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். தி.மு.க. உடுமலை நகர செயலாளர் எம்.மத்தீன் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் ஆண்கள் கருப்பு நிற சட்டையும், பெண்கள் கருப்பு நிற சேலையும் அணிந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி பழனிச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் ராஜமாணிக்கம், நகராட்சி முன்னாள் தலைவர் சி.வேலுச்சாமி, மற்றும் சண்முகசுந்தரம், உடுமலை நகர அவைத்தலைவர் எம்.ஏ.கே.ஆசாத், துணைச்செயலாளர் யு.ஏ.கருணாகரன், பொருளாளர் பழனிசாமி மற்றும் தி.மு.க.வினர், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொ.ம.தே.க., மனிதநேய மக்கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு தேசிய லீக், திராவிடர்கழகம் போன்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story