தூத்துக்குடி, கோவில்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி, கோவில்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2017 4:30 AM IST (Updated: 9 Nov 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நேற்று காங்கிரஸ் கட்சியினர் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நேற்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருச்செந்தூர் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநகர மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, தங்கராஜ், செந்தூர்பாண்டி, மாவட்ட பொருளாளர் அந்தோணி முத்து, மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட்பிரபாகரன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சண்முகராஜ், வட்டார தலைவர்கள் ரமேஷ்மூர்த்தி, தேவசகாயம், செல்லத்துரை, சேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், மகேஷ்குமார், சுப்பாராஜூலு, உமாசங்கர், மாவட்ட துணை தலைவர்கள் திருப்பதிராஜா, மதி, குணசேகரன், மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் மாரிமுத்து, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story