தமிழ்நாட்டில் முதல்முறையாக வேலூரில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடக்கம்
தமிழ்நாட்டில் முதல்முறையாக வேலூரில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் நேற்று தொடங்கப்பட்டது.
வேலூர்,
மருத்துவ படிப்பில் சேர மத்திய அரசு ‘நீட்’ தேர்வை கட்டாயமாக்கி உள்ளது. இதனால் மாநில பாடத்திடத்தில் படித்த மாணவ- மாணவிகளின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியானது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தது.
வேலூர் மாவட்டத்தில் 26 இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேலூரில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார்.
இதில் அமைச்சர் கே.சி.வீரமணி குத்துவிளக்கேற்றி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து, மாணவ- மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதா, ஆட்சியில் இல்லாவிட்டாலும் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார். தொடர்ந்து அவர் மாணவர்கள் நலன் கருதி ‘நீட்’ தேர்வை எதிர்த்து வந்தார். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டுமே ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற முடியும். தமிழ்நாட்டு மாணவ- மாணவிகள் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால்தான் ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறோம். மற்ற மாநிலங்கள் மத்திய பாடத்திட்டத்தில் இணைந்து விட்டன. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டம் இயற்றினோம், சட்டமன்றத்தில் தீர்மானமும் கொண்டு வந்தோம். தற்போது ‘நீட்’ தேவை என்பதை உணர்ந்து விட்டோம். நமது மாணவர்களும் சாதிப்பார்கள். அதற்கான முயற்சிதான் இந்த பயிற்சி மையங்கள்.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக வேலூரில்தான் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதை மாணவ- மாணவிகள் நன்கு பயன்படுத்தி, தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் செல்வராஜ் மற்றும் தலைமை ஆசிரியர் கவுஸ்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story